துதித்திடுவோம் என்றும் துதித்திடுவோம்
துதிகளின் பாத்திரரே
தூயவரே உம்மை தொழுகின்றோம்
துதிகளின் பாத்திரரே
1. மகிமைதனை செலுத்துகிறோம்
மகிமைக்கு பாத்திரரே
மரணத்தை ஜெயித்து உயிர்தெழுந்த
மகிபனைத் தொழுகின்றோம்
2. நல்லவரே உம்மை தொழுகின்றோம்
நன்மைகள் செய்பவரே
நன்மைமைகளால் எம்மை நிரப்பினீரே
நன்றியால் தொழுகின்றோம்
3. ஆவி ஆத்மா தேகமதை
அர்ப்பணம் செய்கின்றோம்
ஆயுள் முழுவதும் ஆண்டவரை
அன்புடன் தொழுகின்றோம்
HOME
More Songs